Princiya Dixci / 2021 ஜூன் 04 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர், வா.கிருஸ்ணா
காரைதீவு பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் உட்பட 32 பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இன்று (04) காலை மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவர் மட்டும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதுடன், ஏனையோர்களின் பரிசோதனை முடிவுகள் நெக்கடிவாக வந்துள்ளன.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா வஸீரின் மேற்பார்வையின் கீழ், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.வேல்முருகு , பொது சுகாதார பரிசோதகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், நுளம்பு கள தடுப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து இந்தப் பரிசோதனையை மேற்கொண்டனர்.
இந்த வார நடுப்பகுதியில் காரைதீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரும் அவருடைய குடும்பத்தினர் மூவரும் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதனையடுத்தே, இந்த அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago