Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 மே 09 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்ஜுன் லாபீர், எம்.என்.எம்.அப்ராஸ், நூருள் ஹுதா உமர்
நாட்டில் ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸின் வேண்டுகோள்ளுக்கு அமைய, கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்டத்தில் 36 மில்லியன் ரூபாவில் சுமார் 850 மீட்டர் காபட் வீதியாகவும், 750மீட்டர் கொங்கிரீட் வீதியாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இவ் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு, கிரீன்பீல்ட் வீட்டுதிட்டத்தில் இன்று (09) நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரோசன் அக்தார், ஏ.சி.ஏ சத்தார், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ பாவா, இணைப்பு செயலாளர் ஏ.எம் சப்றாஸ் நிலாம் கலந்துகொண்டனர்.
அத்துடன், இளைஞர் விவகாரங்களுக்கான இணைப்பாளர் ஏ.எல்.எம்.ஆசீர், கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் பி.சிவசுப்ரமணியம், திட்டப் பொறியியலாளர் எம்.ஐ.எம் ரியாஸ், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.ஜாபீர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
19 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
19 minute ago