Princiya Dixci / 2021 மார்ச் 07 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், சகா
கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சால் திருகோணமலை மக்கெய்சர் விளையாட்டு உள்ளக அரங்கில் நேற்று (06) 2020ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண ஆண் அழகன் (Body builder) போட்டி நடைபெற்றது.
இதில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து வீரர்கள் பங்கு பற்றினார்கள்.
இதில் அம்பாறை மாவட்டம் சார்பாக போட்டியிட்ட காரைதீவு பிரதேச இரு வீரர்களும் பதக்கம் வென்றனர். ஞானேந்திரன் தமிழ்செல்வன் 90 கிலோகிராம் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் மோகன் றிச்சன் 70 கிலோகிராம் எடைப் பிரிவில் வெங்கல பதக்கமும் பெற்றனர்.
அம்பாறை மாவட்டத்திலிருந்து சென்ற குழுவில் இவர்கள் இருவருமே தமிழ்ப் போட்டியாளர்களாவர். இவர்கள் முதல் தடவையாக போட்டியில் பங்கேற்றினர்.
இந்த மாகாண மட்டப் போட்டியில் முதலிரு இடங்களைப் பெற்றவர்கள், தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றத் தகுதிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago