2025 மே 03, சனிக்கிழமை

கிழக்கு மாகாணத்தின் தொற்று 624ஆகியது

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று 624ஆக அதிகரித்துள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் ஏ. லதாகரன் தெரிவித்தார்.

இதன்படி, கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 488 பேரும், அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 20 பேரும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 98 பேரும், திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 18 பேரும், அடங்கலாக 624 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுக்குட்பட்ட  அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி பிரிவிலேயே அதிகளவில் அதாவது 286 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிள்ளனர் எனவும அவர் தெரிவித்தார். 

மேலும், பாலமுனை கொரோனா சிகிச்சை நிலையத்தில் 81 பேரும், மருதமுனை கொரோனா சிகிச்சை நிலையத்தில் 96 பேரும், பதியத்தலாவ கொரோனா சிகிச்சை நிலையத்தில் 61 பேரும், ஈச்சிலம்பற்று கொரோனா சிகிச்சை நிலையத்தில் 07 பேரும், காத்தான்குடி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 150 பேரும், கரடியனாறு கொரோனா சிகிச்சை நிலையத்தில் 94 பேருமாக மொத்தம் 489 பேர்  சிகிச்சை பெற்று வருவதாகவும், கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X