2025 மே 01, வியாழக்கிழமை

’கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் காங்கிரஸே ஆட்சி செய்யும்’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 22 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

'இந்த ஆட்சியில் மட்டுமல்ல, இனி எந்த ஆட்சியிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸே, கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்யும் என்பதுடன், அதற்கான திராணியும் மக்கள் ஆதரவும் எமக்கே உள்ளது' எனக் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு, அக்கரைப்பற்று கடற்கரையில் புதன்கிழமை (21) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'முஸ்லிம் காங்கிரஸை எவராலும் அழிக்க முடியாது என்பதை கடந்தகால வரலாறுகள் மூலம் எம்மால் அறிந்துகொள்ள முடியும். இந்தக் கட்சியை அழிக்க முற்பட்ட பலர், தற்போது முகவரி தெரியாதவர்களாக மறைந்துள்ளனர்' என்றார்.

'மேலும், முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விரட்டப்பட்டவர்கள் செய்வதறியாது கூட்டணி என்றும், வேறு சக்திகளின் பின்னணியிலும் செயற்பட்டு வருகின்றனர். எதிர்வரும் தேர்தல்  மூலம் முஸ்லிம் காங்கிரஸின் பலத்தையும்  அசைக்க முடியாத ஆதரவையும் இவர்கள் அறிந்துகொள்வார்கள்.

'முஸ்லிம்களின் ஏகோபித்த கட்சியாகக் காணப்படும் முஸ்லிம் காங்கிரஸை, அழிக்கவோ அல்லது அதன் பேரம் பேசும் சக்தியை இல்லாமல் செய்யவோ ஒருபோதும் மக்கள்  துணை போகமாட்டார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .