Editorial / 2021 டிசெம்பர் 09 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள முக்கிய கேந்திர நிலையங்கள் மற்றும் வீதிகளில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மஜீட், இன்று (09) தெரிவித்தார்.
வீடுகளில் அகற்றப்படும் கழிவுகள் மற்றும் வீதியோர வியாபாரிகள் குப்பைகளை வாகனத்தில் ஏற்றி வந்து, மக்கள் நடமாடும் பிரதான வீதிகளில் இரவு நேரங்களில் கொட்டுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
குப்பைகளை அகற்றுவதற்கு உள்ளூராட்சி மன்றங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தும் சில வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இதனை மீறி செயற்படுவதாக தெரிவித்தார்.
நடைபாதை வியாபாரத்துக்கு வரும் வியாபாரிகள், வீதி ஓரங்களில் கழிவுப் பொருள்களை வீசிவிட்டு செல்கின்றனர். இவை சுற்றாடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுவத்துவதாகவும், குறிப்பிட்டார்.
வியாபார நிலையங்களில் சேருகின்ற கழிவுப் பொருள்களையும், குப்பைகளை ஓர் இடத்தில் சேமித்து வைத்து பாதுகாப்பான முறையில் அகற்றுமாறு கேட்டுள்ளார்.
இதனை மீறுவோர் மீது நீதிமன்றின் 2008ஆம் ஆண்டின் 44 இலக்க தேசிய பொது வழிகள் சட்டம் 73 (1) இன் பிரகாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago