Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
குழந்தை பேறுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் இறந்தமை தொடர்பாக. கல்முனை ஆதார வைத்தியசாலை முன்பாக அமைதியின்மை ஏற்பட்டது.
இன்று (01) மதியம் குறித்த வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று கூடிய இறந்த பெண்ணின் உறவினர்கள், பொதுமக்கள் இணைந்து நீதியைப் பெற்றுதரக் கோரியும் வைத்தியரின் அசமந்த நிலையையும் கூறி அமைதியின்மையை ஏற்படுத்தினர்.
இதனை தொடரந்து வைத்தியசாலையின் முன்னால் அமைதியின்மை நிலையை ஏற்படுத்தினார்கள் என சந்தேகத்தின் பேரில் 5 பேர், கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
வெல்லாவெளி, பாக்கியல்ல சின்னவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதான மாசிலாமணி சிவராணி குழந்தை பேறுக்காக, கல்முனை ஆதார வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை (31) அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குழந்தைப்பேறுக்காக சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆண் சிசு பிறந்துள்ளது. தொடர்ந்து சிசுவைப் பிரசவித்த தாய்க்கு, திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறையை அடுத்து, மீண்டும் அவருக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் குறித்த சிகிச்சையால் தான் தாய் இறந்ததாக உறவினர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago