Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜூன் 27 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு –பொத்துவில் கடலோரப் பாதை வழியாக கதிர்காமம் முருகன் கோவிலுக்குப் பாதயாத்திரை செல்வதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 2ஆம் திகதிவரை கூமுனை காட்டு வழிப்பாதை பாதை திறந்திருக்கும் என> உகந்தை முருகன் ஆலயத்தின் பிரதம வண்ணக்கர் திஸாநாயக்க சுது நிலமே தெரிவித்தார்.
வடக்கு> கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கதிர்காமம் முருகன் கோவிலுக்குப் பாதயாத்திரை செல்வோர்> குறுந்தூர காட்டுப் பாதையைப் பயன்படுத்துவது உண்டு.
உகந்தை முருகன் கோவில் உற்சவம் மற்றும் யாத்திரிகர்களுக்கான ஏற்பாடு தொடர்பாக கடந்த 20ஆம் திகதி அம்பாறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது> கூமுனை காட்டுப்பாதையைத் திறப்பதற்கான அனுமதி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதனால் வழங்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.
மேலும்> உகந்தை முருகன் கோவிலுக்குச் செல்வோர் வெற்றுப் பொலித்தீன் பைகள்> பிளாஸ்டிக் போத்தல்கள் போன்றவற்றைக் காடுகளில் வீசுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும் மதுபானத்தைக் கொண்டு செல்லுதல்> காடுகளுக்குத் தீ வைத்தல்> மரங்களை வெட்டுதல்> மிருகங்கள் மற்றும் பறவைகளை வேட்டையாடுதல்> புதைபொருள் தோண்டுதல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட முடியாது.
இவ்வாறான காரியங்களில் எவராவது ஈடுபட்டால்> வனபரிபாலனத் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் சம்பந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago