2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கேரளா கஞ்சாவுடன் 4 பிள்ளைகளின் தாய் கைது

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 06 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

பெரியநீலாவணை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடி சந்தியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 1,100 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர், நேற்று (05) மாலை கைது செய்யப்பட்டார்.

பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டீ.சி. ரத்நாயக்க தலைமையிலான சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜீ.எஸ்.பி.பண்டார, பொலிஸ் சார்ஜென்ட் குணபால மற்றும் சுபசிங்க, அபேரத்ன, நிம்ஸ் ஆகிய விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து குறித்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

இதன்போது நீண்ட காலமாக மட்டக்களப்பு மாவட்ட கிராமப் பகுதிக்கு கேரளா கஞ்சாவை விற்பனை செய்து வந்த 4 பிள்ளைகளின் தாய் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வெல்லாவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .