2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்ட வங்கிகள் திறப்பு

Princiya Dixci   / 2021 மார்ச் 02 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கொரோனா அச்சுறுத்தலால்  மூடப்பட்ட கல்முனை, சாய்ந்தமருது அரச வங்கியொன்றின் கிளைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதுடன், மட்டுப்படுத்தப்பட்டுள்ள சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று (01) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ள இக்கிளைகள், சுகாதார துறையினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வங்கிக்கிளைகளில் கடமையாற்றியவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக கடமைக்காக அருகில் உள்ள வங்கிக் கிளைகளின் ஊழியர்கள் தற்காலிகமாக அழைக்கப்பட்டு, மக்களின் நலன் கருதி மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த மாதம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள  கல்முனை அரச வங்கிக்கிளையில் பணியாற்றும் முகாமையாளர் உள்ளிட்ட ஜந்து ஊழியர்களுக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, கல்முனை மாநகரிலுள்ள பிரதான கிளை மூடப்பட்டிருந்தது.

மேலும், முகாமையாளர், வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள கிளைகளுக்குச் சென்று தமது கருமங்களை நிறைவேற்றிக்கொள்ளுமாறு அறிவித்தல் விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அம்பாறை மாவட்டத்தில் கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட 3ஆவது வங்கிக்கிளை இதுவாகும்.

கடந்த மாதம் சாய்ந்தமருது வங்கிக்கிளையில் பணியாற்றும் முகாமையாளர் உள்ளிட்ட ஐந்து ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து சாய்ந்தமருதுக்கிளையும் மூடப்பட்ட்டிருந்தது.

இதேபோன்று கடந்த மாதம் கொரோனாத்தொற்று காரணமாக 14 நாட்கள் மூடப்பட்டிருந்த காரைதீவு வங்கிக்கிளையும் மீண்டும் கடந்த செவ்வாய்க்கிழமை (25)  திறக்கப்பட்டது.

காரைதீவு வங்கிக் கிளையில் 3 ஊழியருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வங்கி உடனடியாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .