Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 மே 31 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எல்.எஸ்.டீன், நூருல் ஹுதா உமர்
அக்கரைப்பற்று பிராந்தியத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முனைப்புடனான பிரதேச மட்ட கொவிட் 19 செயலணியின் குழுக்கூட்டம், அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நேற்று (30) நடைபெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ.காதர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அக்கரைப்பற்று பிரதேச மக்களின் அத்தியாவசிய சேவைகளை நடமாடும் வாகனங்கள் ஊடாக உரிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் செயற்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும், இவ்விடயங்கள் சீராக நடைபெறுவதைக் கண்காணிக்க குழுக்கள் நியமித்தல் குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.
அக்கரைப்பற்று பிரதேச சுகாதாரப் பிரிவில் அண்மைக்காலத்தில் கொரோனா தொற்றாளர்கள் ஒரு சிலர் அடையாளம் காணப்பட்டுள்ள சூழலில், இத்தொற்றின் பரவலைத் தவிர்க்கும் முகமாக தொடர்ந்தும் இறுக்கமான சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து இங்கு ஆராயப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Jul 2025