Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மே 07 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார், அஸ்லம் எஸ்.மௌலானா
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்முனையில் இன்று கண்டனப் பேரணி இடம்பெற்றது.
'சைட்டத்தை மூடு அல்லது நூறு வீதம் அரசு உடைமையாக்கு' எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்ட மருத்துவபீட மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இதில் மருத்துவபீட மாணவர்களுடன் அரச வைத்திய அதிகாரிகள், பல் மருத்துவர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள் உட்பட சில தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்றலில் ஒன்றுகூடிய இவர்கள், பேரணியாக கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தைச் சென்றடைந்தனர். அங்கு சைட்டத்துக்கு எதிராகப் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது.
இதன்போது சைட்டத்துக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .