A.P.Mathan / 2017 மே 04 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருது இளைஞர் தொழிற்பயிற்சி வள நிலையக் கட்டடத்தில் இயங்கிவந்த ஸ்ரீலங்கா இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண தலைமைக் காரியாலயம் அம்பாறை நகருக்கு இடமாற்றப்பட்டுள்ளதைக் கண்டித்து சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை மதியம் ஜும்மாத் தொழுகையை அடுத்து, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று, பின்னர் பேரணியாக சாய்ந்தமருதுப் பிரதேச செயலகம்வரை சென்று, அங்கு மகஜர் கையளிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பல்வேறு பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டப் பேரணியில் அம்பாறையில் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026