Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர்களின் சம்பள நிலுவையை உடனடியாக வழங்கக் கோரி இன்று புதன்கிழமை பிற்பகல் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.எம்.அஹுவர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த ஆசிரியர்கள் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
தமக்குரிய சம்பள நிலுவையை மேலும் இழுத்தடித்து காலம் தாழ்த்தாமல் அதனை வழங்குவதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
அங்கு இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.அஹுவர் கருத்து தெரிவிக்கையில் 'கல்முனை வலயப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களில் சுமார் 1200 ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவை நீண்ட காலமாக இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. இதனால் ஏமாற்றமும் விரக்தியுமடைந்துள்ள குறித்த ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உரிய வேளையில் தரவுகளை அனுப்பாமல் இருந்த வலயக் கல்வி அதிகாரிகளின் அசமந்தப்போக்கே உரிய காலப்பகுதிக்குள் சம்பள நிலுவைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாமைக்கு காரணம் என மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்படுகிறது.
இது விடயமாக வலயக் கல்விப் பணிப்பாளர் தொடக்கம் மாகாண ஆளுநர் வரை பல்வேறு உயர் அதிகாரிகளிடம் எமது கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு முயற்சிகளை எமது சங்கம் மேற்கொண்டுள்ள போதிலும் இன்னும் அதனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்ல' என்றார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago