2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2017 ஜூன் 15 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், பயனாளிகள் இருவரால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பிலுவில் கிழக்கு  2ஆம்  குறிச்சியிலுள்ள  பல்தேவைக் கட்டடத்தில் புதன்கிழமை (14) சமுர்த்திப் பயனாளிகளுக்கு  கடன் வழங்கும் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, தன் குடும்பத்துக்கு கடன் வழங்கவில்லை எனக் கூறி, சமுர்த்தி உத்தியோகத்தர்  மீது  துடுப்பு அட்டையால்  சமுர்த்திப் பயனாளிகளான தந்தையும் மகனும்   தாக்குதல்  நடத்தியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து, குறித்த சமுர்த்திப் பயனாளிகள் இருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .