Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 மார்ச் 16 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் டிப்போவை வேறு இடத்துக்கு மாற்றப்படக்கூடாதெனவும் டிப்போவை அங்கையே நிரந்தரமாக்கக் கோரியும், அந்தச் சாலைக்கு முன்னால் ஒன்றுதிரண்ட சம்மாந்துறை இளைஞர்கள், இன்று (16) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த டிப்போ வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அண்மையில் வெளியான தகவலையடுத்து, டிப்போவை அவ்விடத்திலேயே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தும், அவை வெற்றியளிக்காமையினாலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி, பிரதமர்,போக்குவரத்து அமைச்சர், பிராந்தியத் தலைவர்கள் என பலரையும் விழித்து எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்திக்கொண்டு, கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தீர்வு கிடைக்கும் வரை போராடப்போவதாக அறிவித்துள்ளனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், மிகப்பெரிய பிரதேசமான சம்மாந்துறைக்கு அந்த டிப்போ இருப்பதன் மூலம் பல நன்மைகள் இருப்பதாகவும், இந்த இடத்திலிருந்து டிப்போ அகற்றப்படுவதனால் சம்மாந்துறை பொதுமக்கள் கடுமையான போக்குவரத்து நெருக்கடியை அனுபவிப்பார்கள் எனவும் பெண்கள், பாடசாலை மாணவர்கள் அதிலும் குறிப்பாக மாணவிகள் கடுமையான அசௌகரியங்களை அனுபவிப்பர் எனவும் கருத்து வெளியிட்டனர்.
இவ்விடயம் தொடர்பில் அண்மையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறா அமைப்பினர் சம்பந்தப்பட்ட தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago