2025 மே 01, வியாழக்கிழமை

’சர்வதேசத்தின் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்’

Princiya Dixci   / 2021 மார்ச் 10 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், சகா

“எங்களுக்கு, சர்வதேசத்தின் தீர்வு கிடைக்கும் வரை இவ்விடத்தில் நின்று, சுழற்சி முறையில் போராடிக்கொண்டிருப்போம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரன் தர்சினி தெரிவித்தார்.

அம்பாறை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் கோவில் முன்றலில் நடைபெற்று வருகின்ற சுழற்சி முறையில் நடக்கும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் நேற்று (09) மாலை கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “மாற்றுக்கட்சியினரின் அவர்களது குழப்பும் செயற்பாடுகளை தந்திரோபாயமாக பாவிக்கின்றார்கள். இந்த இடத்தில் இருந்து எம்மை எழுப்புவதற்கு துடிக்கின்றார்கள். ஆனால், எவ்வித துயரமோ துன்பமோ இருந்தாலும் இவ்விடத்தை விட்டுச் செல்ல மாட்டோம்.

“நாம் இவ்விடத்துக்கு போராட்டத்துக்காக வந்தபோது, பாதுகாப்புத் தரப்பினர், புலனாய்வுப் பிரிவினர் எம்மை புகைப்படங்கள் எடுத்தனர். அதை அவர்கள் எங்கு அனுப்புகின்றார்கள் என்று தெரியவில்லை. எமது உயிரைத் துச்சமென நினைத்து, எவருக்கும் பயப்படாமல் இவ்விடத்தில் போராடிக்கொண்டு இருக்கின்றோம். 

“தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் இப்போராட்டத்தை நடத்துகின்றது என்ற சிந்தனை தமிழ் பேசும் மக்கள் எவருக்கும் வரக்கூடாது. ஏனெனில், கட்சிக்கு அப்பால் பெண்கள் ஆகிய நாங்கள் தான் இப்போராட்டத்தை நடத்துகின்றோம்” என்றார்.

இதேவேளை, இங்கு கருத்துரைத்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சீனித்தம்பி யோகேஸ்வரன், “மாகாண ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கு இந்தியாவுக்குக் கடமை இருக்கிறது. அது மாத்திரமல்லாது காணி அதிகாரம், நிதி அதிகாரம், பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை. அதை இந்தியா செய்யுமென நாம் எதிர்பார்க்கின்றோம்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .