Princiya Dixci / 2022 ஜூலை 20 , பி.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அக்கரைப்பற்று பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட சிகரெட்டை தன் வசம் வைத்திருந்து குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாலவருக்பு தலா 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, 14 வயதுச் சிறுவன், சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பதுர்நகர் பிரதேசத்தில் சிறுவனும் 4 இளைஞர்களும் தடை செய்யப்பட்ட சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களை, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில், நேற்று (19) ஆஜர் செய்து போது, 04 இளைஞர்களுக்கு தலா 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, சிறுவனை சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025