Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜனவரி 27 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்த்து வைப்பதற்காக பொது நிருவாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் 1997 ஆம் ஆண்டு முதல் 2021 டிசம்பர் வரையான காலப்பகுதியில் கடமையாற்றிய அதிபர், ஆசிரியர்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படவில்லை என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த சுற்று நிருபம் திருத்தம் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் உள்ளிட்டோருக்கு அந்தச் சங்கம் மகஜர்களை அனுப்பி வைத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.எல்.முகம்மட் முக்தார் தெரிவிக்கையில்;
1997ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கை ஒன்றினால் ஏற்பட்ட அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கும் பொருட்டு, சுமார் 24 வருடங்களுக்குப் பின்னர் நிதி அமைச்சரின் பரிந்துரைக்கமைவாக, தற்போது சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
“இதில் 1997 முதல் 2021 டிசெம்பர் வரையான 24 வருட காலப்பகுதியில் சேவையாற்றி ஓய்வுபெற்ற அல்லது பதவி உயர்வு பெற்ற அதிபர், ஆசிரியர்கள் புறக்கணிப்புச் செய்யப்பட்டு, அவர்களுக்கு எவ்வித நிவாரண ஏற்பாடுகளுமின்றி இச்சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளமை பெரும் அநீதியாகும்.
“இந்த சுற்றுநிருபமானது அதிபர், ஆசிரியர்களுக்கு புதிதாக வழங்கப்படும் சம்பள உயர்ச்சிக்கானதல்ல” என்றார்.
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago