Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 08 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
நான்கம்சக் கோரிக்கையை முன்வைத்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஒலுவில் வளாக முன்றலில் இன்று (8) ஆரம்பித்துள்ளனர்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும், தேசிய வருமானத்தில் 6 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்க வேண்டும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பள நிலுவைக் கொடுப்பனவு பிரச்சினையை தீர்க்க வேண்டும், அரசாங்க பல்கலைக்கழகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்துள்ளனர்.
அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அப்பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.
தமக்குத் தீர்வு கிடைக்காவிடின் தொடர்ச்சியாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளதாகவும் அவர்; கூறினார்.
2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago