2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தீய சக்திகளின் பக்கம் முஸ்லிம் தலைமைகள் செல்கிறதா

Niroshini   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

முஸ்லிம் மக்களை அடமானம் வைத்து சில தீயசக்திகளின் சதி வலையில் எம்மை சிக்கச் செய்யும் செயற்பாடுகளில் எமது முஸ்லிம் தலைமைகள் செல்கிறதா? என மக்கள் மத்தியில் அச்சம் எழ ஆரம்பித்துள்ளது  என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அல் மீஸான் பௌண்டசன் தலைவருமான ஹுதா உமர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று (28) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று வடக்கும் கிழக்கும் பிரிந்திருப்பதனால்தான் நாம் நமது பூமியில் ஆளும்தரப்பாக, சக்திமிக்கவர்களாக அரசியல் அதிகாரமிக்க மக்களாக வாழ முடிகிறது. இந்த சீரான வாழ்வை குழப்பி வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என சில கூலிக்கு மாரடிக்கும் தலைவர்களும் அரசியல்வாதிகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இத் தீர்வு கிடைக்குமா என நாங்கள் உற்றுநோக்கினால் அது கேள்விக்குறியே.

இணைந்த வட, கிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகளை வழங்க வட, கிழக்கின் பெருபான்மை இனத்தவர்கள் ஒருபோதும்  அனுமதிக்க மாட்டார்கள் என்பதை இங்கு சுட்டிகாட்ட விரும்புகிறேன். அப்படியே அவர்கள் தருவார்கள், நாங்கள் ஒப்பந்தம் செய்வோம், அதன் மூலம் பெறுவோம் என வியாக்கியானம் பேசுகின்ற அரசியல் அறிவாளிகளுக்கு காலம் கசப்பான உண்மையை கூறும். நீங்கள் வெறுமனே கற்பனை உலகில் வாழ்கின்றீர்கள் என்பதை இங்கு கூறிவைக்க விரும்புகிறேன்.

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிரித்த சம்பவங்கள் அதிகமாக இருப்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். விடுதலை புலிகளின் ஆதிக்கம் முடிந்தும் கூட கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு நன்மையாக ஒன்றும் செய்ததாக இல்லை. வட, கிழக்கின் குடியேற்றம் முதல் கிழக்கின் காணிப் பிரச்சினை வரை இதற்கு உதாரணம் கூறலாம்.

கடந்த கால அனுபங்களை கருத்தில் கொள்ள வேண்டியது உங்களின் தார்மீக கடமை என்பதை மறந்து விடக்கூடாது. இப்போது இருப்பது போன்றே வடக்கையும் கிழக்கையும் வைத்து கொண்டு அதிகாரத்தை பரவலாக்கி சகல இன மக்களையும் ஒற்றுமையுடன் வாழும் அளவிற்கு சரியான சிந்தனையுடனும் நிதானத்துடனும் காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X