Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Kogilavani / 2017 மே 12 , மு.ப. 06:37 - 1 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
பொத்துவில் மத்திய கல்லூரி மற்றும் பொத்துவில் அறிவார்ந்தோர் சங்கம் இணைந்து நடத்திய 'திரும்பவும் ஸ்கூலுக்கு' எனும் நிகழ்வு, நேற்;று (11) இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பாடசாலையில் கடமையாற்றிய பழைய அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, அதிதிகளை வரவேற்றல், காலை ஆராதனை மற்றும் உடற்பயிற்சி என்பன நடைபெற்றன.
பின்னர் அதிதிகளால் மாதிரி வகுப்பறை நிகழ்வுகளும் நடத்தப்பட்டதுடன், ஆராதனை மண்டபத்தில் 'மீட்டிப்பார்த்தல்' எனும் தலைப்பில் பழைய மாணவர்கள் மீட்டலும் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் கே.ஹம்ஸா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர், உப வலய, கோட்டக் கல்விப் பணிப்பாளர், வைத்திய அத்தியட்சகர், ஓய்வுபெற்ற அதிபர் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை பொத்துவில் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்றியத்துக்கான தெரிவும் இடம்பெற்றது.
i.abdul jabbar Tuesday, 16 May 2017 12:43 AM
Excellent. this is a model to others. this day makes a lot of fun and remembrance.Wish all of you.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago
9 hours ago