2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தடுப்பூசி நிலையங்களாக 4 பாடசாலைகள்

Princiya Dixci   / 2021 ஜூன் 14 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

'சைனோஃபாம்' தடுப்பூசி போடும் நிலையமாகப் பயன்படுத்துவதற்காக காரைதீவுப் பிரிவில் நான்கு பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு, தயார்படுத்தப்பட்டுவருவதாக காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா பஸீர் தெரிவித்தார்.

காரைதீவு இ.கி.மி.பெண்கள் பாடசாலை, காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம், மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலயம் மற்றும் மாளிகைக்காடு அல்ஹூசைன் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவிருக்கிறது.

இதற்கு முன்னோடியாக பிரதேசத்தில் களத்தில் பணியாற்றும் முன்னணிக் களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோரில் தடுப்பூசி செலுத்த விருப்பத்துக்குரியவர்களின் பெயர் விவரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

முதலில் களப் பணியாளர்களுக்கும் பின்னர் 60வயதுக்கு மேற்பட்டடோருக்கும் செலுத்தப்படவிருக்கிறதென அவர் கூறினார்.

முன்னதாக சண்முகா மகா வித்தியாலயத்திலும் அடுத்து மாவடிப்பள்ளி மாளிகைக்காடு பிரதேசத்திலும் இறுதியாக இ.கி.மி.பெண்கள் பாடசாலையிலும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரைதீவுப் பிரதேசத்துக்கு 2,000 தடுப்பூசிகள் கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .