Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜூன் 19 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்;.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு
சர்வதேசத்தின்; தேவைகளும் தலையீடுகளும் அதிகரித்துக் காணப்படும் இவ்வேளையில், பல்லினச் சமூகங்கள் வாழ்ந்துவரும் இலங்கை போன்ற நாடுகளில் எந்தவொரு சமூகமும் தனித்துநின்று தனது சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க முடியாது எனத் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.
அனைத்துச் சமூகங்களும் ஒன்றிணைந்து, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தீர்வு யோசனைகளை முன்வைக்கும்போது மட்டுமே அவை பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைவதுடன், நாட்டில் நிலையான சமாதானத்தையும் ஏற்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.
தேசிய காங்கிரஸின் 13ஆவது வருடாந்தப் பேராளர் மாநாடு, அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'சர்வதேச நாடுகள் தங்களின் தேவைகளுக்காக ஒரு நாட்டிலுள்ள மக்களினது கலை, கலாசாரம், மதம், அரசியல் ஆகியவற்றில் குழப்பங்களை ஏற்படுத்தி, அமைதியுடனும் இன ஒற்றுமையுடனும் இருந்;த நாடுகளில் ஆட்சி மாற்றம் மற்றும் ஸ்திரத்தன்மையற்ற நிலைமையை உருவாக்கி வருவதையிட்டு மக்கள் நிதானமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்' என்றார்.
'ஜனாதிபதி மற்றும் சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நல்லாட்சியை அமைத்த போதிலும், தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியே நாட்டில் காணப்படுகின்றது.
'நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும், இனவாதச் செயற்பாடுகள் தடுக்கப்படாமல் அதிகரித்தவண்ணம் உள்ளன.
'இந்நிலையில், புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவிசெய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துக்கு ஒரு காலவரையறையை வழங்கி எதிர்க்கட்சியில் அமர வேண்டும்' என்றார்.
'குறிப்பாக, முஸ்லிம் சமூகம் தமது கலை, கலாசாரம், மதம், அரசியல் போன்ற விடயங்களில் கவனமாக ஆராய்ந்து ஒழுக வேண்டும். எமது ஆடை விடயம் பற்றி இஸ்லாம் என்ன கூறியுள்ளதோ, அதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், அராபியர்களைப் பின்பற்ற வேண்டிய அவசியம் எமக்குக் கிடையாது.
மேலும், உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை உரிய காலத்தில்; நடத்துவதற்கு இந்த அரசாங்கம் முன்வர வேண்டும்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசாங்கம் மக்களை தொடர்ந்து ஏமாற்றாது, உடனடியாக அத்தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்' என்றார்.
கட்சியின் தலைவராகவும், செயலாளராகவும் முன்னாள் அமைச்சா் .எல்.எம்.அதாஉல்லாவும், மேலதிக செயலாளாராக டாக்டா் ஏ.உதுமாலெப்பை, பொருளாளா் ஜே.வொஸீா், தேசிய அமைப்பாளராக எம்.எஸ்.உதுமாலெப்பை, தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.பஹ்ஜி ஆகியோா் உள்ளிட்ட 19 போ் தொிவு செய்யப்பட்டனா்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago