2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தனிமையில் இருந்த மூதாட்டி கொலை; நகைகள் கொள்ளை

Editorial   / 2022 ஜனவரி 27 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், நூருல் ஹுதா உமர், அஸ்லம் எஸ்.மௌலானா, பாறுக் ஷிஹான்

சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டியை கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க  ஆபரணங்களை கொள்ளையடிச் சென்றுள்ள சம்பவம், இன்று (27) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தெரிவித்தார்.

சாய்ந்தமருது-15 பிரிவு புதுப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தாயாரான சுலைமான் செய்யது புஹாரி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவதினமான இன்று காலை மூதாட்டியின் நான்காவது மகன் வழமைபோல காலை உணவை தாயாருக்கு கொண்டு சென்ற போது, தயார் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரின் விசாரணையில் மூதாட்டி தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் அவரிடம் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .