Freelancer / 2023 ஏப்ரல் 12 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நடவடிக்கைளையும் தற்காலிகமாக இடைநிறுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு, கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார்.
இதற்கமைய, கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும் தரம் 01 தொடக்கம் தரம் 10 வரையான மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் நேற்றிலிருந்து (11) எதிர்வரும் 24ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் புனித நோன்பு மற்றும் தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பு போன்ற பல முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளைக் கொண்ட மாதமாக இம்மாதம் காணப்படுகிறது.
மேலும், அதிக உஷ்ணம் நிறைந்ததாக இம்மாதம் காணப்படுகின்ற போதிலும் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பொருத்தமற்ற நேரங்களில் தொடர்ச்சியான வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருவதானது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துவதாக முறையிடப்பட்டுள்து.
மத அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து எமக்கு தொடர்ச்சியாக கிடைக்கப்பெறுகின்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்முனை மாநகர ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். (N)
14 minute ago
29 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
47 minute ago