2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தமிழ் பிரதேச செயலகத்தை முழுமைப்படுத்த நடவடிக்கை

Princiya Dixci   / 2021 மே 02 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை ஒரு முழுமையான பிரதேச செயலகமாக செயல்படுத்தக் கூடிய அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும் உரிய அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தனக்கு வாக்குறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக அவர்கள் இருவரையும் தனித்தனியாக சந்தித்து, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினைகளை விரிவாக கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.

அக்கலந்துரையாடலில் கல்முனை தமிழ் பிரதேச செயலகமானது கல்முனை தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதையும், அது  இனவாத அரசியலுக்கு இரையாகி தரமிறக்கம் செய்யும் நடவடிக்கையானது அப்பகுதி தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என்பத எடுத்துரைத்ததாகவும் பிள்ளையான் எம்.பி தெரிவித்தார்.

மேலும், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் அண்மையில் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் அப்பிரதேச செயலகத்தை தரமிறக்கம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை பசில் ராஜபக்ஷவின்  கவனத்துக்குக் கொண்டு வந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .