2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

’தமிழ் மக்களுக்கு, ஜெனீவா சாதகமான தீர்வைத் தரும்’

Princiya Dixci   / 2021 மார்ச் 01 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா 

“வழமைக்குமாறாக இந்தமுறை ஜெனீவா அமர்வு விசேசமானது, எமது நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வுகிடைக்குமென  நம்பலாம். அத்தகையதொரு சூழ்நிலை அங்கு நிலவுகிறது. எனவே, இறுதியில் நல்லமுடிவு கிடைக்கும்” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் நேற்று (28) ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, “இன்றைய ஆட்சியாளர்களின் மனநிலையில் எவ்விதமான அதிகாரத்தையும் பகிர்வதில்லை என்றபோக்கு காணப்படுகிறது. அதாவது, அதிகாரப்பகிர்வுக்குத் தாம் தயாரில்லை என்ற மனநிலையிலுள்ளனர். 

“இலங்கை அரசமைப்பிலுள்ள 13ஆவது திருத்தத்தை முறையாக அமுல்படுத்தாத இலங்கை அரசு, அதனைகொணர்ந்த இந்தியாவிடம் பிரேணையை எதிர்க்குமாறு கோருவது வியப்புக்குரியது.

“இந்தியாவின் அயல்நாட்டுக்கான பொதுக்கொள்கையின்படி, அது பெரும்பாலும் நாடுகளைக் குறிவைக்கும் பிரேரணைக்கு ஆதரவாகவோ எதிராகவோ இல்லாமல், நடுநிலை வகிக்கக்கூடியதன்மையே காணப்படுகிறது. ஏனெனில், நாளை தனது நாட்டுக்குள் அப்படிப்பட்ட பிரச்சினை எழுகின்றபோது, சிக்கலை எதிர்நோக்கவேண்டிவரும் என்பதை இந்தியா அறியும்.

“எனினும், இலங்கைத் தமிழ் மக்களது நியாயமான, நீதியான பிரச்சினைகள் இவ்வரைவில் இருப்பதால் தமிழ்நாடு மற்றும் இந்திய தமிழ்மக்கள் எதிர்பார்ப்போடு இருப்பார்கள் என்பதால் வாக்களிப்பதற்கு மாறாக காத்திரமான உரையாடல்களை கருத்துகளை சொல்லக்கூடும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .