2025 மே 01, வியாழக்கிழமை

தம்பிலுவில் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 ஜூன் 03 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

திருகோணமலை - மல்லியத்தீவு சிறுமிகளின் பாலியல் துஷ்பிரயோகத்தை கண்டித்து, தம்பிலுவில் தேசிய பாடசாலை மாணவர்கள் நேற்று (02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதில், சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு தமது கண்டன கோசங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவ,மாணவின் திருக்கோவில் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும் பெரும் குற்றப் பொறுப்பதிகாரியுமான எஸ்.எம்.சதாத் அவர்களிடம் சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரிய மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

இம்மகஜரைப் பெற்றுக்கொண்ட திருக்கோவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் பெற்றோர்களும், பாதுகாவலர்களும் தமது பிள்ளைகள் தொடர்பான பாதுகாப்பை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுடன் ஏதும் பிரச்சினைகள் ஏற்படுமிடத்து உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்படும் இடத்து மாணவர்களுக்கான பாதுகாப்பினை வழங்குவதற்கு பொலிஸார் தயாரக இருப்பதாக அவர் இங்கு தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

மாணவர்களுக்கு தொடர்ந்தும் இவ்வாறான துஷ்பிரயோகள் இடம்பெறுவதை பார்க்கின்ற போது, சிறுவர்களின் பாதுகாப்பை வலுவிழக்கச் செய்து வருவதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது.

இந்த நல்லாட்சி அரசாங்கம் சிறுவர்கள் தொடர்பாக சட்டங்கள் பற்றி குறிப்பிட்டு இருந்த போதிலும் நடைமுறைப்படுத்துவதில் காலதாமதங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, இவ்வாறானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைகளை வழங்குவதன் ஊடாக சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .