2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தாண்டியடி கிராமத்தில் நெசவு நிலையம்

Editorial   / 2021 நவம்பர் 18 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

கிழக்கு மாகாண கிராமியத் தொழிற்றுறைத் திணைக்களத்தின் அனுசரனையுடன், திருக்கோவில் பிரதேச செயலகத்துடன் இணைந்த அம்பாறை மாவட்ட கிராமியத் தொழிற்றுறைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருக்கோவில் பிரதேசத்தின் தாண்டியடி கிராமத்தில் கைத்தறி நெசவு நிலையம், நேற்று (17) மாலை திறந்து வைக்கப்பட்டது.

அம்பாரை மாவட்ட கிராமிய தொழிற்துறைத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி கே.எம்.கே.எஸ்.குலதுங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்மாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, நெசவு நிலையத்தை திறந்து வைத்தார்.

இந்த நெசவு நிலையமானது சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 10க்கும் மேற்பட்ட யுவதிகள் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சிகளை திறமையாக நிறைவு செய்வோறுக்கு தங்களின் வீடுகளில் நெசவு தொழிலை முன்னெடுப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X