Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.கார்த்திகேசு / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டிலுள்ள அனைத்துப் பெரும்பான்மைக் கட்சியினரும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வுத்திட்ட விடயங்களில் தொடர்ந்தும் ஏமாற்றியே வந்துள்ளனர் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாதென்றார்.
திருக்கோவில், தம்பிலுவில் 01 தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நேற்று (28) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்ததார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டிலுள்ள பெரும்பான்மைக் கட்சியினர் தாம் முடிவுகளை எடுத்து, தமிழ் மக்களின் வாக்குகளைச் சூரையாட முடியாதெனவும் தமிழ் மக்கள் தற்போது விழிப்படைந்து, அரசியலை நன்கு தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களித்தால் தமது கோரிக்கைகளை வெற்றிகொள் முடியுமென தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாகச் சிந்தித்து வருகின்றார்கள் எனவும் கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago