2025 மே 05, திங்கட்கிழமை

தொற்றாளர்களின் எண்ணிக்கை கிழக்கில் 10,000 ஐ தாண்டியது

Princiya Dixci   / 2021 ஜூன் 06 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியிருக்கின்றது. அங்கு இன்று (06) வரை 10,038 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா மூன்றாம் அலையின்போது 6,173 பேர் கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 3,527 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,978 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 1,669 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 1,864 பேரும் கொரேனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் இதுவரை 166 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. மூன்றாம் அலையின் அதிகூடுதலான மரணங்கள் திருகோணமலையில் பதிவாகியுள்ளன. இம்மாவட்டத்தில் 97 மரணங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 34 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 18 மரணங்களும் கல்முனை பிராந்தியத்தில்  17 மரணங்களும் பதிவாகியுள்ளன.

கிழக்கு மாகாண மக்கள் மிகுந்த அவதானத்துடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டுமென கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கில் 'சைனோஃபாம்' தடுப்பூசி வழங்கும் திட்டம், செவ்வாய்க்கிழமை (08) முதல் செயற்படுத்தப்படவுள்ளது.

கல்முனைப் பிராந்தியம் தவிர்ந்த திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களுக்கு 75,000 தடுப்பூசிகள் முதற்கட்டமாக ஏற்றப்பட விருக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X