2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தொழிலற்ற இளைஞர், யுவதிகளை இணையத்தளத்தில் பதிவு செய்யும் விழிப்பூட்டல் செயலமர்வு

வி.சுகிர்தகுமார்   / 2018 மார்ச் 17 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலற்ற இளைஞர், யுவதிகளை, பொதுமக்கள் சேவை நிலையத்தினூடாக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்யும் விழிப்பூட்டல் செயலமர்வும் தொழில் வழிகாட்டல் பயிற்சி நெறியும், ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நேற்று (16) நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் யோ.சந்திரபவன் தலைமையில் இடம்பெற்ற பயிற்சி நெறியில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்ததுடன், மாவட்ட செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.கங்காதரன் வளவாளராக கலந்துகொண்டு பயிற்சி நெறியை நடத்தி வைத்தார்.

இங்கு தொழில் வழிகாட்டல் முறை தொடர்பில் இளைஞர், யுவதிகளுக்கு தெளிவூட்டபட்டதுடன் மனிதவலு வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் தொழிலற்றோர் தகவல்களைப் பதிவேற்றுவதன் முக்கியத்துவம் பற்றியும் பதிவேற்றுகின்ற முறை தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

இப்பயிற்சி நெறியில் பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து பயற்சி நெறிகளில் பங்கேற்றுவரும் அதிகமான இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டு பயிற்சி நெறியை நிறைவு செய்ததுடன், இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பிலும் தெளிவு பெற்றனர்.

நிகழ்வில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.நடனகுமார் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .