Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Niroshini / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்றில் நீரிழிவு நோயினால் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு, வறுமைக்கோட்டினுள் வாழும் 30 வயதுடைய யுவதி ஒருவரின் வைத்திய சேவைக்கான இலவச போக்குவரத்து வசதியினை ஏற்படுத்திக் கொடுக்கும் மனிதாபிமான செயற்பாட்டை அக்கரைப்பற்று உதவும் உள்ளம் முச்சக்கரவண்டி சாரதிகள் நலன்புரிச்சங்கத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
அத்தோடு, பிரதேசத்துக்கான இலவச போக்குவரத்தினையும் வலுவிழந்தவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கும் அச்சங்கத்தினர் முன்வந்துள்ளனர்.
இதன் முதற்கட்ட மனிதாபிமான பணிகளை அவர்கள் இன்று (22) ஆரம்பித்ததுடன், பாதிக்கப்பட்ட யுவதியை அம்பாறை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.
அக்கரைப்பற்றில் வசித்துவரும் பாக்கியராஜா லசோதா எனும் யுவதி, கடந்த பல வருடங்களாக நீரிழிவு நோயினால் இரு கிட்னியும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். வாராந்தம் போக்குவரத்திற்காக 1500இற்கு மேற்பட்ட பணத்தை செலவு செய்து அம்பாறை வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சையும் பெற்று வருகின்றார்.
நான்கு சகோதரர்களுடன் தாயையும் இழந்த அவர் தந்தையான பாக்கியராஜாவின் அரவணைப்பில் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வருவதுடன்; தந்தையானவர் தனது பிள்ளையின் வைத்தியத்திற்காக இருந்த சொத்துக்களை எல்லாம் விற்று இன்று பழையதொரு வீட்டில் வாடகை பணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றார்.
இதனை கருத்திற் கொண்ட அக்கரைப்பற்று உதவும் உள்ளம் ஆட்டோ சாரதிகள் நலன்புரிச்சங்கத்தினர் வாராந்தம் இவருக்கான இலவச போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதுடன் ஏனைய பணிகளையும் முன்னெடுக்க முன்வந்துள்ளனர்.
இதேவேளை தனது குடும்ப நிலை கருதி உதவி செய்வதற்கு முன்வந்த முச்சக்கரவண்டி சங்கத்தினருக்கு நன்றி தெரிவித்த குறித்த யுவதியின் தந்தை, உதவி செய்ய எண்ணும் பரோபகார உள்ளங்கள் அக்கரைப்பற்று இலங்கை வங்கியில் உள்ள 5685546 எனும் இலக்கத்தினுடாக பணத்தினை அனுப்பி உதவி செய்யுமாறும் தொடர்பு கொள்வதற்கு 077-6069208 அழைக்குமாறும் உருக்கமான வேண்டுகோளை விடுத்தார்.
சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
“பணம் சம்பாதிப்பது என்பதை தாண்டி மனிதாபிமான செயற்பாடுகளையும் தங்களது சங்கம் முன்னெடுக்கும் எனவும் குறிப்பிட்ட அவர் 0779695673, 0775024907 எனும் இலக்கங்கள் மூலம் தங்களை தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
30 Apr 2025
30 Apr 2025
30 Apr 2025