2025 மே 01, வியாழக்கிழமை

’நதி நடந்த பாதை’ சேவை பாராட்டு

Princiya Dixci   / 2021 மார்ச் 10 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

கிழக்கு மாகாண உள்ளூராட்சி, கிராம அபிவிருத்தி, கிராமிய தொழிற்துறை, சட்டமும் ஒழுங்கும், நிதி, போக்குவரத்து, சுற்றுலாத்துறை, வீடமைப்பு அமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ. அஸீஸின் 30 வருட நிர்வாக சேவை பூர்த்தியை முன்னிட்டு, சேவை நலன் பாராட்டும் “நதி நடந்த பாதை” எனும் நூல் அறிமுக விழா, அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் நாளை (11) காலை 09 மணிக்கு நடைபெறவுள்ளது.

அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாயல் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ். ஜுனைதீன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவுக்கு முதன்மைச் பேச்சாளராக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் கலந்துகொள்ளவுள்ளார்.

நூல் அறிமுக உரையை, தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லா நிகழ்த்தவுள்ளார்.

இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள் மற்றும் இலக்கியவாதிகள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .