Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
நிந்தவூர் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களிடமிருந்து சோலைவரியினை அறவிடு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, பிரதேச சபையின் செயலாளர் அறிவித்துள்ளார்.
1987ம் ஆண்டின் 15ம் இலக்க உள்ளூராட்சி கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக நிந்தவூர் சபை அதன் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களினால் செலுத்தப்பட வேண்டிய சோலைவரியினை செலுத்துமாறு ஒவ்வொரு குடியிருப்பாளர்களுக்கும் தனித்தாக கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
2014 ம் ஆண்டு முதல் இன்று வரை பிரதேச சபைக்கு செலுத்த வேண்டிய சோலை வரி நிலுவைத் தொகை முழுவதையும் குறிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் செலுத்துமாறு குடியிருப்பாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குள் கடந்த எட்டு வருடங்களாக செலுத்தப்படாத சோலைவரி நிலுவைத் தொகை முழுவதையும் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
செலுத்தப்படாதுள்ள சோலைவரி நிலுவை தொகை முழுவதையும் குறித்த காலப்பகுதிக்குள் செலுத்துமாறும், தவறும் பட்சத்தில் 10 வீத தண்ட பணத்துடன் சேர்த்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வரிப்பண மதிப்புகளுக்கு மறுப்புகள் இருந்தால் ஒவ்வொரு காணிக்கும் தனித்தனியாக எழுத்து மூலம் இவ் அறிவித்தல் பெற்றுக் கொண்ட திகதியிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்னர் அறிவிக்க வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
4 hours ago
4 hours ago