Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 மார்ச் 31 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை, நிந்தவூர் பிரதேச சபையின் 2021 மார்ச் மாதத்துக்கான 04வது சபையின் 36ஆவது கூட்டமர்வு, தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில், பிரதேச சபை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நேற்று (30) நடைபெற்றது.
இதன்போது, மத அனுஸ்டானம் நடைபெற்ற பின்னர் 2021 பெப்ரவரி மாதத்துக்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல், அம்மாதத்துக்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல் மற்றும் தவிசாளரின் உரை என்பன நடைபெற்றன.
பின்னர் 2018ம் ஆண்டு விகிதாசார மற்றும் கலப்புத் தேர்தல் மூலம் உள்வாங்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை காட்சிப்படுத்துதல், ஏ.எம் றுக்கியா என்பவரின் காணி சுவீகரிப்புக்கான நஷ்டஈட்டுத் தொகையின் மீதிப் பணக் கொடுப்பனவு சம்மந்தமாகவும் உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, அது சம்பந்தமாக ஆலோசனைகள் பெறப்பட்டன.
மேலும், மாட்டுப்பளை கடற்கரை வீதியில் மின் விளக்குப் பொருத்துதல், கடற்கரை ஓரங்களில் கழிவுகளை வீசுதலுக்கு எதிராக உறுப்பினர் ஏ.அஸ்பர் முன்வைத்த முன்மொழிவுகள், முஸ்தபாபுர வட்டார தமிழ் மயானத்தில் மின்விளக்குகள் பொருத்துதல் தொடர்பில் உறுப்பினர் ஏ.அப்துல் வாகிது முன்மொழிவுகள் இக்கூட்ட அமர்வில் கலந்துரையாடப்பட்டதுடன், கடிதங்கள் வாசிக்கப்பட்டு, தீர்மானங்களும் பெறப்பட்டன.
19 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
19 minute ago