2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

நீண்ட கால முரண்பாடுகளுக்குத் தீர்வு

Princiya Dixci   / 2021 மே 11 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபை எல்லையினுள் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளை, மாநகர சபையும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து கையாளுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் ஆகியோர் கையொப்பமிட்டு, ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், கல்முனை மாநகர சபை எல்லையினுள் அனைத்து உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்களைப் பரிசோதித்தல், சட்ட நடவடிக்கை எடுத்தல், நுகர்வோருக்கு சுத்தம், சுகாதாரமான உணவுகளை உறுதிப்படுத்தல், திண்மக்கழிவகற்றல் மற்றும் பொதுச் சுகாதாரம் உள்ளிட்ட செயற்பாடுகளை மாநகர சபையும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து தமக்குள் அதிகாரங்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் ஆளணிகளைப் பகிர்ந்துகொண்டு, கூட்டாக செயற்பட இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும், கடந்த காலங்களில் இவ்விடயங்களைக் கையாள்வதில் இவ்விரு அரச நிறுவனங்களுக்குமிடையில் நிலவி வந்த முரண்பாடுகள் மற்றும் அதிகார இழுபறிகளுக்கு இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தீர்வு காணப்பட்டிருப்பதாக டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X