Editorial / 2022 ஜனவரி 26 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்ட விவசாயிகளிடம் இருந்து பெரும்போக நெல்லை அரசாங்கம் உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யப்படுமென, ஸ்ரீ லங்கா விவசாய அமைப்பின் தலைவர் ஏ.சீ. சிறாஜுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்துக்கமைய, விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் நெல் 95 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
“அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
“இம்மாவட்டத்தில் நெற் சந்தைப்படுத்தும் சபைக்குரிய நெற்களஞ்சிய சாலைகள் இதுவரை திறக்கப்படாமலுள்ளன. அரசாங்கம் உத்தரவாத விலைக்கு விவசாயிகளிடமிருந்து செல்லை கொள்வனவு செய்யாமல் இருப்பதால் மிகவும் குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகள் நெல்லை கொள்வனவு செய்கின்றனர். இதனால் விவசாயிகள் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்” என்றார்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025