2025 மே 02, வெள்ளிக்கிழமை

போட்டிப் பரீட்சை

Kogilavani   / 2017 மார்ச் 12 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

விவசாயக் கல்லூரிக்கு 2017/ 2018ஆம் ஆண்டுக்கான, ஆங்கில மொழி மூல, விவசாய உற்பத்தி தொழில்நுட்பக் கல்வியில், ஒரு வருட தேசிய டிப்ளோமா பாடநெறியைப் பயில்வதற்கு, புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் போட்டிப் பரீட்சை, எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதாக, பாலமுனை விவசாய கல்லூரியின் அதிபரும் உதவி விவசாயப் பணிப்பாளருமான எம்.எப்.ஏ. சனீர், தெரிவித்தார்.

பாலமுனை விவசாயக் கல்லூரிக்கு 40 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனரெனவும் இதற்கமைவாக, பாலமுனை, கண்டி, வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களில் இப் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் அவர் இன்றுத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணப் பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை, பாலமுனை விவசாயக் கல்லூரியில் நடைபெறவுள்ளதாகவும், இதில் தமிழ் மொழி மூலப் பரீட்சார்த்திகள் 120 பேரும் சிங்கள மொழி மூலப் பரீட்சார்த்திகள் 14 பேரும் தோற்றவுள்ளனரென அவர், மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .