2025 மே 01, வியாழக்கிழமை

பாலமுனையில் 25 பேருக்கு சிவப்பு அறிவித்தல்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பாலமுனையில் நுளம்புகள் பெருகக்கூடிய  வகையில் இடங்களை வைத்திருந்த  25  பேருக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

இவ்வாறு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டவர்கள் 14 நாட்களுக்குள் தங்களின் இடங்களைத் துப்புரவு செய்ய வேண்டும் என்பதுடன்,  இதை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தையிட்டு பாலமுனையில் இன்று (4) சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் வெற்றுக் காணிகள், பாழடைந்த கட்டடங்கள், பாவிக்கப்படாத குடிநீர் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .