2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு கொரோனா

Editorial   / 2022 ஜனவரி 30 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

சாய்ந்தமருது பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரது ஜனாஸா மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் அமைந்துள்ள மஜ்மா நகர் கொவிட் மையவாடியில் இன்று (30) நல்லடடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது-15 ஆம் பிரிவு புதுப்பள்ளி வீதியிலுள்ள ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்றில், தனிமையில் வசித்து வந்த 78 வயதுடைய சுலைமான் செய்யது முஹாரி என்பவர் கடந்த வியாழக்கிழமை (27) அதிகாலை கொலை செய்யப்பட்டு, அவர் வசமிருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டிருந்தன.

அவரது உடலில் இருந்து பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் (29) மாலை கிடைக்கப் பெற்றதாகவும் அதில் அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும்அவரது புதல்வர் அலியார் சௌபர் தெரிவித்தார்.

இதையடுத்தே தமது தாயின் ஜனாஸா மஜ்மா நகரில் நல்லடடக்கம் செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, கொலையாளி இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள், குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X