2025 மே 02, வெள்ளிக்கிழமை

பரசூட் பயிற்சியின் போது விபரீதம்; விமானப்படை வீரர் பலி

J.A. George   / 2021 மார்ச் 20 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, உகன விமானப்படை முகாமின் பரசூட் பயிற்சியின் போது இடம்பெற்ற விபத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு வீரர் காயமடைந்துள்ளார் என விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார். 

8,000 அடி உயரத்திலிருந்து பரசூட் வீழ்ந்துள்ளதாகவும் இரத்மலானை விமானப்படை முகாமைச் சேர்ந்த படைத் தளபதி ஒருவரே உயிரிழந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார். 

இவ்விபத்து, இன்று (20) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதோடு, விபத்தில் காயமடைந்த மற்றைய விமானப் படை வீரர், அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .