Princiya Dixci / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
ஆலோசனை மற்றும் நல்லிணக்கப் பேரவை (ஏ.ஆர்.சி) முஸ்லிம் கலாசார அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து இலங்கையில் உள்ள முன்மாதிரியான பள்ளிவாசல்களைத் தேர்ந்தெடுத்து, விருது வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக, அகில இலங்கை முஸ்லிம் லிக் வாலிப முன்னணிகளின் பணிப்பாளர் எம்.ஐ.எம். உதுமாலெவ்வை தெரிவித்தார்.
இதற்கமைவாக, அகில இலங்கை முஸ்லிம் லிக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனம் மற்றும் மனித எழுச்சி நிறுவனம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கான விளக்மளிக்கும் செயலமர்வு, அக்கரைப்பற்று சாஹிறா வித்தியாலய மண்டபத்தில் நாளை (30) பிற்பகல் 3.45 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026