Editorial / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.ஏ.றமீஸ்
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதான வீதியின் அருகிலிருந்த மரத்துடன் பிக்கப் வாகனமொன்று, இன்று (15) காலை மோதி விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு - ஏறாவூரிலிருந்து அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்றுக்கு பிரதேசங்களுக்கு கோழிகளை ஏற்றி வந்த பிக்கப் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த இவ்வாகனம், காலை 05 மணியளவில் அட்டாளைச்சேனை சதோசவுக்கு அருகில் இருந்த மரத்துடன் மோதியதியதினாலேயே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்துக்குள்ளான வாகனம் கடுமையான சேதத்துக்குள்ளாகியுள்ளதுடன், அதிலிருந்து சாரதியையும் மேலும் இருவரையும், பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் மீட்டெடுத்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், அக்கரைப்பற்று பொலிஸாருக்கும் தகவலை வழங்கியிருந்தனர்.
விபத்துக்குள்ளான வாகனத்தை, பொலிஸார் அவ்விடத்திலிருந்து கொண்டு சென்றுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

19 minute ago
31 minute ago
36 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago
36 minute ago
44 minute ago