Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
“பெரும்புரளியைக் கிளப்பி, பாடசாலைகளையெல்லாம் மூடவைத்த புரெவி சூறாவளி கடந்துவிட்டது. ஆனால், கொடிய கொரோனா போகாது காரைதீவைச் சுற்றி வளைத்துள்ளது. எனவே, மக்களே மிகுந்த அவதானத்துடன், எச்சரிக்கையாயிருங்கள்” என காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் தெரிவிக்கையில், “எம்மைச் சூழவுள்ள சாய்ந்தமருதில் 7 பேரும் நிந்தவூரில் சம்மாந்துறையில் ஒருவருமாக கொரோனாத் தொற்று அதிகரித்துவருகிறது. இந்நிலையில், மத்தியிலிருக்கக்கூடிய காரைதீவு பாதுகாப்பாக இருக்கவேண்டிய கட்டாயமுள்ளது. எனவே, பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதோடு, பிரதேச மட்ட தீர்மானங்களையும் கடைப்பிடிக்கவேண்டும்” என்றார்.
அத்துடன், நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, காரைதீவுப் பிரதேசத்திலுள்ள சகல சிகை அலங்கார நிலையங்கள், பொதுச்சந்தை தற்காலிகமாக மறு அறிவித்தல் வரை மூடுமாறும் அவர் கேட்டுள்ளார்.
மேலும், காரைதீவுப் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரத்தியோக கல்வி நிலையங்கள், முன்பள்ளிகள், தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் மத்ரசாக்கள் என்பவற்றை மறு அறிவித்தல் வரை மூடுமாறும் களியாட்ட நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மக்கள் ஒன்றுகூடக்கூடிய வகையிலான நிகழ்வுகள் எல்லாவற்றையும் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago