2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புல்லு வெட்டச் சென்றவர் சடலமாக மீட்பு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் புல்வெட்டுவதற்குச் சென்று காணாமல் போன 60 வயது ஆண் ஒருவர், முதலைக்கடிக்கு உள்ளாகிய நிலையில், ஒலுவில் - களியோடை ஆற்றில் இன்று (04) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நிந்தவூ,ர் அட்டடைப்பள்ளத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான அழகையா ஞானசேகரம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார் என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நபர், கடந்த 2ஆம் திகதி வீட்டில் இருந்து மாடுகளுக்கு புல்வெட்டுவதற்காக களியோடை ஆற்றின் கரைப்பகுதிக்குச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. அவரை, உறவினர்கள் தேடிவந்த நிலையில் அவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்தனர்.

இந்நிலையில், முதலைக்கடிக்கு உள்ளாகிய நிலையில் களியோடை ஆற்றில் இருந்து இன்று காலை சடலமாக  மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .