Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 மே 11 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா, சபேசன்
முஸ்லிம் அரசியலாளர்கள், தங்களுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, தமிழர்களுடைய பூர்வீகப் பிரதேசங்களைக் கபளீகரம் செய்கின்ற விடயம் நீண்டகாலமாக அரங்கேறி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குற்றஞ்சாட்டினார்.
அந்த முன்னெடுப்பின் அங்கமாகவே கல்முனை வடக்கு பிரதேச செயலக தரம் குறைப்பு விடயத்தைப் பார்க்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.
தனது நாவிதன்வெளி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில், தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டும் என்ற அடிப்படையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செயற்படுகின்றது.
“கல்முனை வடக்கு பிரதேச செயலகம் கடந்த 33 வருடங்களாக தனியான செயலகம் போன்று இயங்கி வருகிறது. அவ்வாறான வேளையில், முஸ்லிம் அரசியலாளர்கள், தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காக தமிழர் பிரதேசங்களை கூறுபோட்டு, கபளீகரம் செய்ய முற்படுகின்றனர்.
“நிச்சயமாக இவ்வாறான செயற்பாடுகள் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரமல்ல, கிழக்கு மாகாணத்திலே தமிழ் - முஸ்லிம் உறவில் பாரியதொரு விரிசலை ஏற்படுத்தும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
3 hours ago
4 hours ago