Princiya Dixci / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் நேற்று (14) கிடைத்த அண்டிஜன் பரிசோதனை முடிவுகளில் 12 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொத்துவில் சவாலைப் பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணித் தாய்க்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பிரசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, அவருடன் தொடர்புடைய 32 குடும்ப உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் 11 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் பாலமுனை மற்றும் மருதமுனை கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
43 minute ago
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago
6 hours ago
6 hours ago