Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
சிறப்பாக மக்கள் சேவைகளை முன்னெடுத்து வருகின்ற கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீரை பாராட்டி நினைவு சின்னம் ஒன்றை, கல்முனை மறுமலர்ச்சி மன்றம் வழங்கி வைத்துள்ளது.
இந்த நினைவு சின்னத்தை, கல்முனை மறுமலர்ச்சி மன்ற பொதுச் செயலாளர் மீரா முஹைதீன் பைசல் நிர்வாக குழு தலைவர் அஹ்மட் புர்க்கான் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களான காரியப்பர் முஹம்மது றூமி, இளைய தம்பி முஹம்மது சமீர் ஆகியோர் இணைந்து பொறுப்பதிகாரியிடம் இன்று (23) வழங்கினர்.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கல்முனை பகுதியில் கொரோனா மற்றும் எரிபொருள் நெருக்கடி காலகட்டத்தில் பொதுமக்களின் நலனில் அக்கறையுடன் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து, மக்கள் மத்தியில் பராட்டை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 minute ago
23 minute ago
32 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
23 minute ago
32 minute ago
40 minute ago